ஜெ.ஜெ.அரேன்ஞ்மெண்ட்ஸ்

logo

கணகாபிஷேகம்:

கால ஸ்வரூப செளரி சாந்தி or கனகாபிஷேகம் என்று அழைக்கப்படுகிறது. இவ்விழாவானது ஆணின் வயது 90 எட்டும் பொழுது செய்யப்படுகிறது (தம்பதியர் சமேத).

ஆணின் 60வது வயதில் சஷ்டியப்த பூர்த்தியம், 70வது வயதில் பீமரத சாந்தியும், 80வது வயதில் சதாபிஷேகமும், 90 வயதில் கனகாபிஷேகம் செய்யப்படுகிறது.

90வயது வரை கணவன், மனைவி (தம்பதியராக) இருப்பது மிகச்சிறப்பாக பார்க்கப்படுகிறது. இதில் முக்கியமாக நல்ல உடல் நலம், மற்றும் மன நலம் ஆகியவற்றுருடன் 90வயதை எட்டுவது மிகச் சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. இவ்விழாவானது அவரவர் விருப்பம் போல் வீட்டிலோ அல்லது கோவிலிலோ செய்யப்படுகிறது. இவ்விழாவின் போது ஆசீர்வாதம் மற்றும் வாழ்த்து பெறுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.