இவ்வலைதளத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறது. ஜெ.ஜெ.அரேன்ஞ்மெண்ட்ஸ், திருக்கடையூர்.இங்கு ( திருக்கடையூரில், முக்கிய நிகழ்வுகளாக):-
“திருக்கடையூர் சக்தி பீடங்களில் ஒன்றாகவும், அட்ட வீரட்ட தளங்களில் ஒன்றாகவும், விநாயகருக்கு அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாகவும் இத்திருத்தலம் விளங்குகிறது.”
அபிராமி பட்டர் மற்றும் நாயன்மார்களால் பாடல் பெற்ற தலமாகவும் சிறந்து விளங்குகிறது
ஸ்ரீ அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் ஆலயம் மயிலாடுதுறை –தரங்கம்பாடி சாலையில் காவேரி தென்கரையில் 20கி.மி தொலைவில் திருக்கடையூரில் அமைந்து உள்ளது. சிதம்பரத்தில் இருந்து 40கி.மி தொலைவில் அமைந்து உள்ளது.
மார்கண்டேயருக்காக, சிவன் காலனை வதம் செய்து, எப்போதும் என்றும் பதினாறாக இருக்க இறைவன் அருள் புரிந்த இடம். இத்திருத்தலம், திருக்கடவூர், வில்வவனம், பிஞ்சிலவனம், திருக்கடவூர் என்றும் அழைக்கப்படுகிறது .