கோவில் நகரம் – கும்பகோணம்
கும்பகோணம் – குடந்தை தஞ்சை மாவட்டத்தின் காவேரி கரையில் அமைந்துள்ள பசுமையான நகரம்.
ஓர்முறை உலகம் அழியும் பிரளயம் வந்த பொழுது காக்கும் கடவுளான பிரம்மன் தனது படைப்பு ஆற்றலை எல்லாம் அமுதத்தில் கலந்து ஓர் குடத்தில் இட்டு(வைத்து) குடத்தை இமயமலை உச்சியில் பாதுகாப்பாக வைத்து இருந்தார்.
பிரளய காலத்தில் கடல் பொங்கி இமயமலை உச்சியை அடைந்தது. அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த குடம் நீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டது பின்னர் அது தென் திசையை நோக்கி நகர்ந்து தரை தட்டி நின்ற இடமாக கும்பகோணம் கருதப்படுகிறது.
இன்று குடத்தின் மீது சிவபெருமான் அம்பை எய்தினார் குடம் உடைந்து அமுதம் கொட்டியது. சிவபெருமான் அமுதத்தில் நனைந்து மணலால் ஓர் சிவலிங்கத்தை உருவாக்கி அதனுள் ஐக்கியமானார்.
அது ஆதி கும்பேஸ்வரராகவும் மீதமிருந்த அமுதம் அணைத்து இடங்களிலும் பரவி செழுமையாக்கியது. அப்படி பரவிய அமுதம் மகாமாக குளத்தில் நிரம்பி மீத முள்ள அமிர்தம் ஐந்து தலங்களில் தங்கின.
அந்த தளங்கள்
பக்தர்கள் முதலில் ஐந்து தலங்களில் வழிபட்டு நீராடிய பின்பு கடைசியாக ஆதி கும்பேஸ்வரரை வழிபட வேண்டும்.
1. சூரியன் (Sun) – ஞாயிறு
அமைந்துள்ள இடம்: சூரியனார் கோவில் (ஆடுதுறை மற்றும் திருமங்கலக்குடி அருகே அமைந்து உள்ளது).
இறைவன்: (மூலவர்) : காசி விஸ்வநாதர், இறைவி: (அம்மன்) : உஷாதேவி & சாயாதேவி.
தல விருட்சம் : வெள்ளருக்கு.
தீர்த்தம்: சூரிய புஷ்கரணி.
வழிபாடு நேரம்: காலை 6.00 மணி முதல் 12.30 மணி வரை மாலை 4.00 மணி முதல் 9.00 மணி வரை
தொலைபேசி எண்: 0435-2472349.
சூரியனார் கோவில் : (சூரியன் - ஞாயிறு) இத்திருத்தலம் ஆடுதுறைக்கு அருகாமையில் அமைந்த சிவ திருத்தலம். இங்கு சூரியன் தனிச் சன்னதி அமையப் பெற்று அருள் பாளிக்கிறார் மூலவர்களாக சிவன்(விஸ்வநாதர்) உமை பார்வதி உஷாதேவியாக காட்சியளிக்கிறார். நவகிரக தலங்களில் முதலாவதாக(சூரியன்) இத்திருத்தலம் அமைந்துள்ளது. மேலும்…..
2. நிலா(சந்திரன்) – திங்கள்
அமைந்துள்ள இடம் : திங்களுர் (கும்பகோணம் அருகில் அமைந்து உள்ளது).
இறைவன்: (மூலவர்) : கைலாசநாதர் இறைவி: பெரிய நாயகி.
தல விருட்சம் : சந்ர திர்த்தம் (காவேரி திர்த்தம்).
வழிபாடி நேரம் : காலை 6.00 மணி முதல் 12.30 மணி வரை மாலை 4.00 மணி முதல் 9.00 மணி வரை
Temple contact no: 04362-262499.
திங்களுர் : திங்கள் – நிலா (Moon) திங்களுர் கோவில் நகரம் கும்பகோணத்திற்க்கு மிக அருகாமையில் அமைந்து உள்ளது. இங்கு மூலவராக கைலாசநாதரும் உமையாக பெரிய நாயகி அம்மனும் அருள் பாளிக்கின்றனர் இங்கு சந்திரனுக்கு தனி சன்னிதி அமையப்பெற்று அருள்புரிகிறார். நவ கிரகங்களில் இது இரண்டாவது தலமாக விளங்குகிறது. மேலும்…..
3. அங்ககரன் : (Mars) – செவ்வாய்
அமைந்துள்ள இடம் : வைத்தீஸ்வரன் கோவில் அல்லது புள்ளிருக்கு வெள்ளூர்(மயிலாடுதுறை அருகே அமைந்துள்ளது).
இறைவன்: (மூலவர்) : வைத்தியநாதர் அல்லது வைத்தீஸ்வரன் அம்மன்: தையல் நாயகி அம்மன்.
தீர்த்தம்: சித்தமிர்தா.
வழிபாடு நேரம்: காலை 6.00 மணி முதல் 1.00 மணி வரை மாலை 4.00 மணி முதல் 9.00 மணி வரை
Temple contact no: 04364-279423.
வைத்தீஸ்வரன் கோவில்: இத்திருத்தலம் மயிலாடுதுறை மற்றும் திருக்கடையூருக்கு அருகில் அமைந்து உள்ளது. இங்கு மூலவராக வைத்தீஸ்வரன் உமை தையல் நாயகியும் காட்சி அளிக்கின்றனர். நவ கிரக தலங்களில் இது மூன்றாவது தலமாக அமையப்பெற்றுள்ளது. மேலும்…..
4. புதன் (Mercury)
அமைந்துள்ள இடம்: திருவெண்காடு(திருக்கடையூருக்கு அருகாமையில் அமைந்துள்ளது).
இறைவன்: (மூலவர்) : சுவேதாரண்யேஸ்வரர் அம்பாள்: பிரம்ம வித்யா அம்பாள், பிரம்ம வித்யாம்பிகை.
தல விருட்சம்: ஆலமரம்.
தீர்த்தம்: சூரிய தீர்த்தம், அக்னி தீர்த்தம், சந்ர தீர்த்தம்.
வழிபாடு நேரம்: காலை 6.00 மணி முதல் 12.30 மணி வரை மாலை 5.30 மணி முதல் 9.00 மணி வரை
தொலைபேசி எண்: 04364-256424.
திருவண்காடு: இத்திருத்தலம் மயிலாடுதுறை மற்றும் திருக்கடையூருக்கு அருகாமையில் அமைந்து உள்ளது. இங்கு மூலவர்களாக சுவேதாரண்யேஸ்வரர் அம்பாள் பிரம்ம வித்யாம்பிகையும் அருள் பாளிக்கின்றனர். நவகிரக தலங்களில் இது நான்காவது தலமாக விளங்குகிறது. மேலும்…..
5. குரு (Jupiter) – வியாழன்
அமைந்துள்ள இடம் : ஆலங்குடி – (கும்பகோணத்திற்கு ஆருகாமையில் அமைந்துள்ளது).
இறைவன்: (மூலவர் ) : ஆபத்சஹாயேஸ்வரர் அம்பாள்: திருபுவன நாயகி அம்மன், இளவார்குழலி, உமையம்மை.
தல விருட்சம் : பூளை தீர்த்தம்: அமிர்தபுஷ்கரனி.
வழிபாடு நேரம் : காலை 6.00 மணி முதல் 12.30 மணி வரை மாலை 4.00 மணி முதல் 9.00 மணி வரை.
தொலைபேசி எண் : 04374-269407.
ஆலங்குடி: இத்திருத்தலம் கும்பகோணத்திற்கு அருகில் அமைந்து உள்ளது. மூலவர்களாக ஆபத்சஹாயேஸ்வரரும் உமையாக திருபுவன நாயகியும் அருள் பாளிக்கிறார்கள். நவகிரக தலங்களில் இத்தலம் ஐந்தாவதாக அமைந்துள்ள தலம் இது. மேலும்…..
6. சுக்கிரன் (Venus) வெள்ளி : அக்னீஸ்வரர் கோவில் – கஞ்சனூர்
அமைந்துள்ள இடம்: ஆலங்குடி கும்பகோணம் அருகே அமைந்து உள்ளது. இங்கு மூலவர்களாக அக்னீஸ்வரர் மற்றும் அம்பாள் கற்பகாம்பிகை அருள் பாளிக்கிறார்கள்.
தல விருட்சம்: பலா மற்றும் புரசு.
தீர்த்தம்: அக்னீ தீர்த்தம்.
வழிபாடு நேரம்: காலை 8.00 மணி முதல் 12.00 மணி வரை மாலை 5.00 மணி முதல் 9.00 மணி வரை.
தொலைபேசி எண் : 0435-2473737.
கஞ்சனூர்: இத்தலம் கும்பகோணம் அருகே அமைந்து உள்ளது மற்றும் முலவர்களாக அக்னீஸ்வரர் அம்பாள் கர்பகாம்பிகை இங்கு அருள் பாளிக்கின்றனர். நவகிரக தலங்களில் இது ஆறாவது இடமாக அமைந்து உள்ளது. மேலும்…..
7. சனி (Saturn) – சனீஸ்வரன்
அமைந்துள்ள இடம் : திருநள்ளார்(காரைக்கால்) அருகே அமைந்து உள்ளது.
இறைவன்: தர்பாரண்யேஸ்வரர் அம்பாள்: யோகமித்ரா, பொன்முளையால்.
தல விருட்சம்: தர்பை.
தீர்த்தம்: நள தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், வாணி தீர்த்தம்.
வழிபாடு நேரம் : காலை 6.00 மணி முதல் 1.00 மணி வரை மாலை 4.00 மணி முதல் 9.00 மணி வரை.
தொலைபேசி எண் : 04368-236560.
திருநாள்ளார்: இத்தலம் காரைக்கால் அருகே அமைந்து உள்ளது மற்றும் முக்கிய தெய்வங்களாக தர்பாரண்யேஸ்வரர் மற்றும் யோகமிர்தா அம்மனும் காட்சி அளிக்கின்றனர் நவகிரக தலங்களில் இது ஏழாவது ஆலயமாக திருநள்ளார் அமைந்து உள்ளது. மேலும்…..
8. ராகு – நாகநாதர்
அமைந்துள்ள இடம் : திருநாகேஸ்வரம்(கும்பகோணம்) அருகே அமைந்து உள்ளது.
இறைவன்: (மூலவர்) : நாகநாத சுவாமி, அம்பாள்: ஸ்ரீ கலி குஹாம்பிகை.
தல விருட்சம் : செண்பகம்.
தீர்த்தம்: சூரிய தீர்த்தம், சூரிய புஷ்கரணி.
வழிபாடு நேரம் : காலை 6.00 மணி முதல் 1.00 மணி வரை மாலை 4.00 மணி முதல் 9.00 மணி வரை
தொலைபேசி எண் : 0435-2463354.
திருநாகேஸ்வரம்: இத்திருத்தலம் கும்பகோணம் அருகே அமைந்து உள்ளது மற்றும் முக்கிய தெய்வமாக இறைவன் நாகநாத சுவாமியும் அம்பாள் ஸ்ரீ கலிகுஹாம்பிகையும் அருள் பாளிக்கின்றனர் இது நவகிரக தலங்களில் எட்டாவது ஆலயமாக திருநாகேஸ்வரத்தில் அமைந்து உள்ளது. மேலும்…..
9. கேது – நகநாத சுவாமி
அமைந்துள்ள இடம் : கீழபெரும்பள்ளம்(மயிலாடுதுறைக்கு) அருகே அமைந்து உள்ளது.
இறைவன்: நாகநாத சுவாமி அம்பாள்: சௌந்திர நாயகிதேவி.
தல விருட்சம் : மூங்கில்.
தீர்த்தம்:நாக தீர்த்தம்.
Sanctum: Naganathar and Sri Soundara Devi (Nayaki) – Urchavar: Somaskandar.
வழிபடும் நேரம் :காலை 6.00 மணி முதல் 1.00 மணி வரை மாலை 4.00 மணி முதல் 9.00 மணி வரை.
தொலைபேசி எண் : 04364- 260 424.
கிழ பெரும்பள்ளம் : இத்தலம் மயிலாடுதுறை அருகே அமைந்து உள்ளது. இங்கு மூலவராக நகநாத சுவாமியும் அம்பாள் ஸ்ரீ சௌந்திரநாயகி அம்மனும் அருள் பாளிக்கிறார்கள் இது நவகிரக தலங்களில் ஒன்பதாவது ஆலயமாக கிழ பெரும்பள்ளத்தில் அமைந்து உள்ளது. மேலும்…..
© Copyright @ 2023 reserved by JJ Arrangements.