சதாபிஷேகம் :- நாம் நம் வாழ்நாளில் 60 வருடம் (வயது) கடக்கும் போது சஷ்டியப்த பூர்த்தி or சஷ்டிபூர்த்தியும், 70வது வயதில் பீமரத சாந்தியும், 80 வயது முடிகையில் சதாபிஷேகமும் இந்து தத்துவ முறைப்படி கோவில்களில் விழாவாக மணமக்களுக்கு செயவிக்கபடுகிறது.
மனிதனின் ஆயுள் 120 வருடமாக ஆயுள் கணக்கில் கொள்ளப்படுகிறது. 60 வயதை கடந்து அடுத்த மைல்கள்ளாக 80 வயதை கணக்கில் கொள்கிறோம்.
ஓர் மனிதன் தன் வாழ்நாளில் 80 வயதை கடக்கிறான் எனில் 1000 நிலவை கண்டவனாகிறான். சதாபிஷேகம் செய்யும் போது நமது முன்னோர்களும் தேவர்களும் வாழ்த்துவதாக ஓர் நம்பிக்கை.
இந்த சாந்தியானது உடல் ஆரோக்கியத்திற்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் செய்யப்படுகிறது. இவ்விழாவில் பிரம்மனை வேண்டி பூஜை செய்யப்படுகிறது.
பிரம்மா கீழ்காணும் இந்து அவதாரங்கள் கொண்டவராக உள்ளார்.
இந்த சதாபிஷேகம் நோய் இல்லாமலும் நல்ல உடல் மற்றும் மண நலத்துடன் இருப்பதற்க்காகவும் சிரஞ்சீவி போல் வாழவும் செய்விக்கப்படுகிறது.
சதாபிஷேக முதல் நாளன்று ஏகாதச ருத்ரகூயம் மற்றும் மஹான்யாசா ருத்ராபிஷேகம் க்ருமாஞ்கனா ஆகியவை செய்யப்படுகிறது.
இந்த நிகழ்வானது(விழா) மூன்று தலைமுறை பிள்ளைகள் செய்து வைக்கின்றனர் (மகன் - மகள்), (பேரன் - பேத்தி), (கொள்ளுபேரன் - கொள்ளுபேத்தி).
ஓர் மனிதன் தன் வாழ்நாளில் 80வயது கடக்கிறான் எனில் 1000 நிலாவை (பௌர்ணமி) கண்டவனாகிறான். இது எல்லோருக்கும் கிடைப்பதில்லை. ஆகவே இந்து 80 வயது முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.
© Copyright @ 2023 reserved by JJ Arrangements.