சஷ்டிப்பூர்த்தி or சஷ்டியப்த பூர்த்தி என்றும்அழைக்கப்படுகிறது. உக்ரத சாந்தி மற்றும் மணிவிழா ஆகிய பெயர் கொண்டும் கொண்டாடப் படுகிறது.
இந்த விழாவானது இந்து முறைப்படி கோவில்களில் தம்பதியருக்கு (கணவன் - மனைவி) ஆகிய இருவருக்கும் ஆகம விதிப்படி செய்விக்கப்படுகிறது.
சஷ்டியப்த பூர்த்தி ஆணின் வயது 60 நிறைவு செய்கையில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. சஷ்டியப்த பூர்த்தி எனும் வார்த்தை சமஸ்கிருதத்தில் இருந்து தமிழுக்கு வந்த வார்த்தையாகும்.
சஷ்டியப்த பூர்த்தி : சஷ்டி – அறுபது, அப்த – வருடம், பூர்த்தி – நிறைவு செய்தல்.
இந்து முறைப்படி ஓர் மனிதன் வாழ்நாள் 120 வருடமாக கணக்கில் கொள்ளப்படுகிறது. இதில் பாதி வயது 60 ஆக கணக்கில் எடுத்து கொள்ளப்படுகிறது. இது ஓர் மனிதனின் மைல் கல்லாகவும் ஆயுளில் பாதியை நிறைவு செய்வதை ஓட்டியும் கொண்டாடப்படுகிறது
தமிழ் வருடங்கள் மொத்தம் 60 ஆக கணக்கில் கொள்ளப்படுகிறது. நாம் பிறந்தபோது வரும் வருடம் 60வயது வருகையில் மீண்டும் அதே வருடத்தை நிறைவு செய்கிறோம். இதுவும் ஓர் விசேஷசமாக கருதப்படுகிறது.
இந்நிகழ்வு தம்பதியருக்கு இரண்டாவது திருமணமாகவும் குழந்தைகள் மற்றும் பேரன் பேத்திகளுடன் கொண்டாடுவது ஓர் இனிய நிகழ்வாகவும் கருதப்படுகிறது.
© Copyright @ 2023 reserved by JJ Arrangements.