ஊர் பெயர்: தில்லையாடி :- புராணப் பெயர் : தில்லையாடி நல்லூர், வில்லவதாரண்யம் மூலவர்: சரணாகத ரட்சகர்(சார்ந்தாரை காத்த சுவாமி) உற்சவர்: நடராஜப் பெருமான் அம்மன்: பெரிய நாயகி அம்மன்(ப்ரஹன் நாயகிஅம்மன்) தல விருட்சம்: வில்வம் தீர்த்தம்: சக்கரை தீர்த்தம் தல மூர்த்திகள் விநாயகர்: சனி(அனுக்கிரஹ சனீஸ்வரன்), அகஸ்திய முனிவர், சோழ விநாயகர், காட்சி கொடுத்தவர்(உமையடன் ஈசன்) மற்றும் சங்கர நாராயணன் கோவில் பழமை : 1000 முதல் 2000 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது வழிபடும் நேரம்: காலை 6.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 வரைஇங்கு கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. (04.12.2016)
தில்லையாடி காவிரி தென்கரையில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் தில்லையாடியில் அமைந்து உள்ளது. இத்திருக்கோவில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்தும், திருக்கடையூரில் இருந்து 3கி.மி தொலைவிலும், திருநாள்ளாரில் இருந்து 15கி.மி தொலைவிலும் மயிலாடுதுறையில் இருந்து 25கி.மி தொலைவிலும் அமைந்துள்ளது. இங்கு மூலவராக சரணாகத ரட்சகரும், உமையாக ஸ்ரீ பெரிய நாயகி அம்மன் அருள் பாளிக்கின்றனர்.
இக்கோவிலில் நவகிரக வழிபாடு இல்லை இது இக்கோவிலின் சிறப்பாகப் போற்றப்படுகிறது.
தில்லையாடி &தில்லையாளி(தில்லையாளி நல்லூர்) இவ்வூர் ஈசனின் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. தில்லையாளி (தில்லை + யாளி) தில்லை = தில்லை அம்பலவாணன் மற்றும் சரணாகத ரட்சகரையும் குறிக்கிறது யாளி = யாளி என்ற ஓர் விலங்கினம் இத்திருத்தலத்தில் யாளி சிவனுக்கு வில்வ பூஜை செய்து வழிபட்டு வந்ததன் காரணமாக தில்லையாளி என்று அழைக்கப்பட்டது. யாளி பூஜை செய்த திருக்கோலத்தை இப்போதும் இங்கு கொடி மரத்தில் காணலாம் தில்லையாடி (தில்லை +ஆடி)தில்லை = நடராஜரையும் ஆடி = ருத்ரதாண்டவம்(ஆலிங்கனம்).
இத்தலம் பஞ்சபூத தலங்களில்(நீர், நிலம், நெருப்பு, ஆகாயம், காற்று) இவற்றில் ஆகாயத்தலமாக(சிதம்பரத்திற்கு) இணையாக கருதப்படுகிறது. நடராஜப் பெருமான் தாண்டவம்(Cosmic Dance) ஆடியது இவ்விரு தலங்களில் மட்டுமே.
இத்திருத்தலம் 13 மற்றும் 15 நூற்றாண்டுகளில் புனரமைக்கப்பட்ட கோவில். இத்திருப்பணி சோழர் காலத்தில் செய்யப்பட்டது.
இத்திருத்தலத்தில் மூலவராக சுயம்புமூர்த்தி(சரணாகத ரட்சகர்) கிழக்கு நோக்கியும் அம்மை பெரிய நாயகி தெற்கு நோக்கியும் அமர்ந்து அருள் பாளிக்கின்றனர் மற்றும் தல மூர்த்திகளான, சனி பகவான், தனி சன்னிதி அமையப் பெற்றும் அருள் பாளிக்கின்றனர்.
சரணாகத ரட்சகர், பெரியநாயகி அம்மன், அனுக்கிரஹசனி, அகஸ்திய முனி, இளங்கார முனிவர், காட்சி கொடுத்தவர், சோழ விநாயகர், குரு பகவான், கெஜலட்சுமி, முருகன், சங்கர நாராயணன், துர்க்கை, பிரம்மா, மற்றும் பைரவர், ஆகியோர் இத்திருத்தலத்தில் அமைந்து அருள் பாளிக்கின்றனர்.கோவில் நடை திறந்து இருக்கும் நேரம் : காலை 6.00 மணி முதல் 1.00 மணி வரையிலும் மாலை 4.00 மணி முதல் 9.00 மணி வரையிலும் வழிபடலாம்
ஓர் முறை ஹிரன்யாசுரன் எனும் அசுரன்(தீவிர சிவ பக்தனாகவும் விளங்கினான்) முனிவர்களையும், தேவர்களையும் சிரமம்படுத்திக் கொண்டு இருந்தான் இதனால் தேவர்கள் மகாவிஷ்னுவிடம் வேண்டுகின்றனர். உடன் மஹாவிஷ்னுவும் ஹிரன்யாசுரனை அழித்து தேவர்களையும், முனிவர்களையும் காப்பாற்றினார்.
மஹாவிஷ்னு ஹிரன்யாசுரனை கொன்று பாவம் தீர்ப்பதற்காக இத்திருத்தலத்தில் சிவனை சரணாகதி அடைத்து விமோசனம் அடைந்தார். அன்றிலிருந்து சரணாகத ரட்சகராக இங்கு எல்லோருக்கும் அருள்பாலிக்கின்றார்.
மஹாவிஷ்னு இத்திருத்தலத்தில் சங்கர நாராயணனாக காட்சி அளிக்கிறார்.
சனீஸ்வரன் இத்தலத்தில் அணுக்கிரஹ சனீஸ்வரனாக தனி சன்னதியில் நின்றபடி கிழக்கு நோக்கி நின்றபடி பக்தர்களுக்கு அருள் பாளிக்கின்றார்்.
இத்தலத்தில் இருக்கும் சனீஸ்வரன் திருநள்ளாரில் இருக்கும் சனீஸ்வரனைப் போன்று ஓத்த அமைப்பை உடையவர். இவ்விரு தளங்களிலும் தனி சன்னிதி அமையப் பெற்று அருள் பாளிக்கின்றார் மற்றும் வாயிற் காப்போனாக இவ்விரு தலங்களில் நின்றபடி கிழக்கு நோக்கி அருள் பாளிக்கின்றார்.
இங்கு சனிப்பெயர்ச்சி காலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. அதோடு மட்டுமின்றி வக்கிர காலங்களில்(சனி பெயர்ச்சிக்கு முன்னும் / பின்னும்) ஏற்படக் கூடிய பிரச்சனைகளுக்கு வக்கிர சனியை வழிபடுவதால் அணைத்து பிரச்சனைகளிலிருந்தும் விடுபடலாம்.
இங்கு வக்ர நிவர்த்தி பூஜை மிகச் சிறப்பாக செய்யப்படுகிறது. சங்காபிசேஷம் மற்றும் வக்ர நிவர்த்தி பூஜைகள் இங்கு விமரிசையாக செய்யப்படுகிறது.
ஓர் முறை அகஸ்தியர் தொழுநோய் காரணமாக மிகவும் அவதியுற்று வந்தார். ஆனால் அந்நோய் குணமாகவில்லை பின்பு இத்தலத்திற்கு வந்து சக்கரை தீர்த்தத்தில் நீராடி இறைவனை வேண்டி வழிபட்டார், உடன் நோய் தீர்ந்து குனமாகினார்.
ஆகையினால் அகஸ்தியர் இக்கோவிலில் சிறிது காலம் தங்கி இறைவனை வழிபட்டார்்.
இத்திருத்தலத்தில் தொழுநோய் கண்ட அகஸ்தியர் சிலையை தற்சமயம் காண இயலும்.
இங்கு தொழுநோய் மற்றும் தீராத தோல்(சரீரம்) சம்பந்தமான பிணி உடையவர்கள் இங்கு வந்து சக்கரை தீர்த்தத்தில் குளித்து இறைவனை வேண்டினால் அனைத்தும் குணமடையும் என்பது ஐதீகம்.
இத்திருத்தலத்தில் காட்சி கொடுத்தவருக்கு அருகாமையிலேயே அகஸ்திய முனிவரும் காட்சி அளிக்கிறார். அவருடைய கையில் தொழுநோயின் அறிகுறியுடன் சிலை அமையப்பெற்றிருக்கிறது.
பெயரைப் போலவே அம்மன் இங்கு நெடுந்தோற்றத்துடன் காட்சி கொடுக்கிறார். இத்தலத்தில் தனி சன்னிதி அமையப்பெற்று தெற்குமுகமாக அருள் பாளிக்கின்றார்.
பெரிய நாயகி அம்மன் தனது வலது கரத்தில் தாமரையுடனும் இடது கரத்தில் அக்.ஷய மாலையுடன் அருள் பாளிக்கின்றார்.
சிறப்பு வழிபாட்டு காலங்களில் உற்சவ அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாளிக்கின்றார்.
இளங்காரரும் அப்பணியை செய்வனே செய்து வந்தார். அப்போது பணி எவ்வாறு நடைபெறுகிறது என்பதை பார்வையிட தில்லையாளி நல்லூர்(தில்லையாடி) வழியாக சென்றார். அப்போது தில்லையாடியில் சிதிலமடைந்த நிலையில் இருந்த கோவிலை திருப்பணி செய்து முடித்தார்
அங்கிருந்தபடியே செயலில் இறங்கினார். திருக்கடையூர் கோவில் கட்டுமான பணிக்கு போக மிதமுள்ள கட்டுமான பொருட்களை கொண்டு திருப்பணியை செயவ்வனே செய்ய ஆரம்பித்தார். ஆனால் இதை பற்றி மன்னரிடம் எதுவும் சொல்லவில்லை.
ஓர் நாள் அமைச்சரவையில் அரசன் திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவில் குடமுழுக்கு நீராட்டு விழா பற்றி விவாதித்துக் கொண்டு இருந்தார். அன்று அக்கோவிலுக்கு குடமுழுக்கு நீராட்டு விழாவுக்கான தேதி குறிக்கப்பட்டது. அதேதியைக் கேட்டவுடன் இளங்காரர் மனம் வெதும்பினார். ஏனெனில் அத்தேதியில் தில்லையாடி ஸ்ரீ சார்ந்தாரை காத்தசுவாமி ஆலயத்திற்கு கும்பாபிஷேகம் செய்ய எண்ணி நாள் குறித்து இருந்தார்.
மன்னருக்கு இதைப்பற்றி தெரிவிக்காததால் எதுவும் பேச முடியவில்லை. அன்று மாலை புறப்பட்டு தில்லையாடி வந்துவிட்டார்.
மன்னர் இரவு உறங்கும் வேலையில் சிவபெருமான் கனவில் தோன்றி என்னுடைய பகத்தன் ஒருவன் தில்லையாடியில் கோவில் கட்டி கும்பாபிஷேகத்திர்க்கு நாள் குறித்துவிட்டமையால் தன்னால் வர இயலாது என்று தெரிவித்தார்.
உடன் கண் விழித்தெழுந்த அரசன் என்ன செய்வது என்று விழித்தார். மறுநாள் காலை தில்லையாடிக்கு தன் பரிவாரங்களுடன் வந்தடைந்தார். அங்கு கட்டப்பட்டிருந்த பெரிய கோவிலைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்தார்.
அதுபற்றி அங்கிருந்து இளங்கரரிடம் கோவில் புணரமைக்கப்பட்டது பற்றி வினவினார் அவரும் அதை ஒப்புக் கொண்டார். கோபம் அடைந்த மண்ணன் சிவ தொண்டே ஆயினும் மன்னனிடம் தெரிவிக்காமல் செய்தமையால் காவலர்களிடம் இளங்காரரின் இரு கைகளையும் வெட்டுமாறு ஆணையிட்டர்.
உடன் காவலர்கள் வெட்டுவதற்கு ஆயுத்தமானார்கள். இளங்காரர் தன் இரு கரங்களையும் கூப்பி இறைவனை வேண்டி நின்றார். அப்போது காவலர்கள் அவரின் கரங்களை வெட்ட முற்பட்டபோது இறைவன்(சிவபெருமான்) தனது கால்களில் வெட்டை வாங்கி கொண்டார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மன்னன் செய்வதறியாது திகைத்து நின்றான். காட்சி தந்த இறைவனை கண்ணீர் மல்க மன்னிப்பு கோரி வணங்கி நின்றார்.
இளங்காரரும் மகிழ்ந்து தம்மைப்போல் சரணாகதி அடைந்தவர்களுக்கு அருள்புரிய வேண்டி தாங்கள் இத்தலத்தில் அருள் பாளிக்க வேண்டும் என வேண்டி நின்றார்.
இறைவனும்(உமையம் சிவனும்) அவ்வாறு இங்கு காட்சி அளிப்பதாக வரம் அருளினார். அத்தோடு சோழனின் நினைவாக விநாயகரை பிரதிஸ்டை செய்து வணங்கிய பின் தம்மை வணங்குமாறு பணிந்தார்.
இங்கு சோழ விநாயகர் தனி சந்நிதி அமையப் பெற்று காட்சி கொடுத்தவர் அருகிலேயே அருள் பாளிக்கிறார்.
பின்னர் இளங்காரர் இத்திருத்தலத்திலேயே இருந்து சிவ பணி செய்து இளங்கார முனிவராக இறைவனிடம் சரணாகதி அடைந்தார்.
இங்கு உமையுடன் சிவபெருமான் தன் வெட்டுண்ட காலுடன் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
திருவிழா:
வேண்டுதல்:
© Copyright @ 2023 reserved by JJ Arrangements.