ஊர் பெயர்: திருக்கடையூர் புராணப்பெயர்: திருகடவூர், வில்வவனம், பிஞ்சிலவனம், கடவூர். மூலவர்: ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் உற்சவர்: கால சம்ஹார மூர்த்தி அம்மன்: ஸ்ரீ அபிராமி அம்மன் தலவிருட்சம்: வில்வம், ஜாதிமுல்லை. தீர்த்தம்: அமிர்த புஷ்கரணி, கங்கா தீர்த்தம் கோவில் பழமை : 1000 வருடம் முதல் 2000 வருடத்திற்கு முற்ப்பட்டது கோவில் நடை (திறக்கும் நேரம்) : காலை 6.00 மணி முதல் 1.00 மணி வரை மாலை 4.00 மணி முதல் 9.00 மணி வரை
திருக்கடையூர் ஸ்தலம் அட்ட வீரட்டதலமாக போற்றப்படுகிறது அட்ட வீரட்ட தலம் சிவபெருமானின் வீரத்தை போற்றுவதாக காணப்பெறுகிறது “அட்ட வீரட்ட தலம் “ அட்ட = எட்டு வீரட்ட = வீரம், (எழுச்சி) தலம்=இடம், (அமைவிடம்) “திருக்கடையூர் அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாகவும் சிவன் யமனை வதைத்த இடமாகவும்”. “காணப்பெறுகிறது “.
ஓர் சமயம் பிரம்மா சிவபெருமானிடம் ஞான உபதேசம் பெற வேண்டி கைலாயம் சென்றார், சிவன் அவரிடம் வில்வ விதைகளை கொடுத்து பூலோகத்தில்(பூமி) விதைக்க அறிவுறுத்தினார், விதிக்கப்பட்ட விதை ஓர் நாழிகைக்குள் எங்கு மரமாக வளர்கிறதோ அவ்விடத்தில் ஞான உபதேசம் செய்வதாக கூறினார்.
வில்வ விதையானது இத்தலத்தில் ஓர் நாழிகைக்குள் மரமாக வளர்ந்து நின்றது. அதன்படி பிரம்மா இங்கு சிவனை வணங்கினார் சிவன் கூற்றுப்படி பிரம்மாவிற்கு இங்கு ஞான உபதேசம் செய்து வைத்தார், இவரே இங்கு மூலவராகவும் அருள் பாளிக்கிறார்.
பாற்கடலில் அமிர்தம் எடுத்து தேவர்கள் விநாயகரை வணங்காமல் அதை உண்ணச் சென்றனர். ஆகையால் விநாயகர் அதை மறைத்து வைத்துவிட்டார். பின்னர் விநாயகரை வணங்கிய தேவர்கள் அமிர்த கலசத்தை பெற்று வழிபடுவதற்காக வைத்தனர்.
அப்போது அமிர்த குடம் இருந்த இடத்தில சுயம்புலிங்கம் உண்டானது, அமிர்தத்தில் இருந்து தோன்றியதால்.
அமிர்தகடேஸ்வரர்” என்றும் பெயர் பெற்றது.
கால சம்ஹரமூர்த்தி பெயர்க் காரணம் யாதெனில் கால = காலன்(யமன்), சம்ஹார = சம்ஹாரம் செய்தால்(அழித்தல்), மூர்த்தி = சிவபெருமான்(அமிர்தகடேஸ்வரர்)
இறைவன் சிவபெருமான் மார்க்கண்டேயருக்காக யமனை சம்ஹாரம் செய்த தலம் அமிர்த கடேஸ்வரர் பெயர் காரணம் அமிர்த = அமிர்தம், கடம் =பானை, ஈஸ்வரர்= சிவபெருமான்
அமிர்ததில் இருந்து(பானையில்) வந்தமையால் அமிர்தகடேஸ்வரர் ஆயிற்று. மிருகண்டு முனிவர் – மருத்துவதி அம்மாள் தம்பதிகளுக்கு நீண்ட நாட்களாக பிள்ளைகள் இல்லை. ஆகையினால் மிருகண்டு முனிவர் கடுந்தவம் புரிந்தார். அதன் காரணமாக ஈசன் குழந்தை வரம் அருளினார் அதோடு அக்குழந்தை நிறைந்த அறிவோடும் குறைந்த ஆயுலோடும் இருக்கும் என்றும் வரம் அருளினார். இதனையடுத்து தனக்குப் பிறந்த குழந்தைக்கு மார்கண்டேயன் எனப் பெயரிட்டு வளர்த்து வந்தார். 16வயது வந்தவுடன் அவனின் ஆயுள் பற்றிய கவலை மிருகண்டு முனிவருக்கும் மருத்துவதிக்கும் ஏற்ப்பட்டது.
தன் பிறப்பில் உள்ள ரகசியத்தை தெரிந்து கொண்ட மார்கண்டேயன் சிவ தலங்களுக்கு சென்று வழிபடலானான். 107வது திருத்தலமாக திருக்கடையூரை அடைந்து ஈசனை வேண்டினான். அப்போது அவனது இறுதி நாளும் வந்தது
யமன் அவனுடைய உயிரை பறிக்க வந்தபோது மார்கண்டேயன் ஓடிச்சென்று சிவனை கட்டிக்கொண்டான். உடன் யமன் பாசக்கயிறை வீசினான், பாசக்கயிறு மார்கண்டேயனுடன் சேர்ந்து சிவலிங்கத்தின் மீதும் விழுந்தது.
உடன் சிவபெருமான் கோபம் கொண்டு என்னையும் சேர்த்தா இழுக்கிறாய் என கோபமுற்று காலனை(யமனை) எட்டி உதைத்து சூலாயுதத்தால் சம்ஹாரம் செய்தார்.
அத்தோடு மார்கண்டேயனைப் பார்த்து நீ என்றும் பதினாறாய் சிரஞ்சீவியாக இருப்பாயாக என்று அருளினார்.
காலன் சம்ஹாரம் செய்யப்பட்டு விட்டதால் புவியில் இறப்பே இல்லாமல் போய்விட்டது. பூமாதேவிக்கு பாரம் தாங்க முடியவில்லை. தேவி சிவனிடம் முறையிட கோபம் தணிந்து எமனுக்கு மீண்டும் உயிர் தந்து வரம் அருளினார்.
இத்திருத்தலத்தின் காலன் உயிர் இழந்ததும் பின்பு உயிர் பெற்றதும் இத்தலத்தில் தான்.
கால சம்ஹரமூர்த்தி என்ற பெயரில் இங்கு அருள்பாளிக்கிறார். இவர் தமது இடது காலில் ஆதிசேஷன் தலை மீது வைத்து இருக்கிறார்.
சாதரணமாக கால சம்ஹாரமூர்த்தியை தரிசிக்கும் போது எமனை பார்க்க இயலாது. பூஜை செய்யும் தருணத்தில் பீடத்தை திறக்கப்படும் அச்சமயத்தில் எமனை பார்க்க முடியும்.
எமன் இல்லாமல் காட்சி தருவதை சம்ஹார கோலமாகவும் எமனுடன் காட்சியளிப்பதை உயிர்ப்பரித்த கோலமாகவும் இங்கு காணலாம்.
ஒரே சமயத்தில் சம்ஹார மற்றும் அனுக்கிரக மூர்த்தியாகவும் இங்கு காணலாம்.
அபிராமி பட்டார் பிறந்த ஊர் ஆதலால் எப்போதும் அன்னை அபிராமி கோவிலுக்கு செல்வதையும் எப்போதும் அவள் நினைவாகவும் இருந்துவந்தார்.
ஓர் சமயம் சரபோஜி மன்னர் கோவிலுக்கு விஜயம் செய்தார் அச்சமயம் பட்டரும் கோவிலுக்குள் இருந்தார். மன்னர் பட்டரிடம் இன்று என்ன நாள் என வினவினார்.
பட்டரோ அபிராமியின் நினைவாக இருந்தமையால் அரசர் கேட்டதை அறியாமல் தவறாக அமாவாசைக்கு பதில் பௌர்ணமி திதி என்று கூறிவிட்டார்.
மன்னரோ கோபம் கொண்டு பவுர்ணமி என்பதை நிருபிக்காவிடில் மரண தண்டனை விதிப்பதாக அறிவித்தார்.
பட்டர் உடன் அக்ணி வளர்த்து அம்பிகையை வேண்டி பதிகம்(அந்தாதி) பாடினார். அவர் 79வது பாடல் பாடியபோது அபிராமி அம்மன் தன் காதில் அணிந்திருந்த சந்திர அம்சமான தோட்டை வானில் எறிய அது முழு நிலவாக காட்சி அளித்தது. மன்னர் பட்டரிடன் மன்னிப்பு கோரினார்.
மூலவர்களாக அமிர்தகடேஸ்வரர் மற்றும் அபிராமி அம்மனும் தல மூர்த்திகளாக கள்ள விநாயகர், சோமாஸ்கந்தர், நடராஜர், சிவகாமி, மகாலஷ்மி, வில்வவனேஸ்வரர், குரு(தஷ்ணாமூர்த்தி) பிட்சாண்டவர், பஞ்சபூதலிங்கள், மார்கண்டேயர், அகஸ்தியர், 63நாயன்மார்கள், சப்த கண்ணிகள், மகாலட்சுமி, துர்க்கை, சண்டிகேஸ்வரர் மற்றும் பைரவர் தைதலத்தில் அருள்பாளிக்கின்றனர்.
சென்னை to திருக்கடையூர் 264km.
© Copyright @ 2023 reserved by JJ Arrangements.